மேலும் செய்திகள்
. ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தின விழா
15-Aug-2025
கோவை; கோவை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், கோவை - அவிநாசி சாலையிலுள்ள வ.உ.சி.,மைதானத்தில் நேற்று சுதந்திர தினவிழா கொண்டாட்டம் நடந்தது. காலை 9:05 மணிக்கு, கலெக்டர் பவன்குமார் தேசிய கொடி ஏற்றி, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பல்வேறு துறையில் சிறப்பாக செயல்பட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும், சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு பதக்கங்களையும் வழங்கினார். இந்தியா - பாகிஸ்தான் எல்லையான வாகாவில், நடைபெறுவது போன்ற அணிவகுப்பை கோவை மாநகர ஆயுதப்படை போலீசார் நடத்தினர். வாகா அணிவகுப்பை இதுவரை நேரில் காணாத, கோவை மக்கள் ஆரவாரத்துடன் கண்டுகளித்தனர். இதைத்தொடர்ந்து, பள்ளி மாணவ மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. கோவை மாநகர போலீசின் மோப்பநாய் பிரிவிலுள்ள, நாய்களின் சாகச நிகழ்ச்சிகளும் நடந்தன. சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தாருக்கு சான்றிதழ்களையும், பரிசுகளையும் வழங்கி கலெக்டர் கவுரவித்தார்.
15-Aug-2025