உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கிராமப்புற மேம்பாட்டிற்காக வாக்கரூவின் அபார திட்டம்

கிராமப்புற மேம்பாட்டிற்காக வாக்கரூவின் அபார திட்டம்

கோவை; வாக்கரூ அறக்கட்டளை, நேட்டிவ் மெடிகேர் அறக்கட்டளையுடன் இணைந்து, சுல்தான்பேட்டை தொகுதி நிர்வாகத்தின் ஆதரவுடன், கிராமப்புற சமூகம் சார்ந்த மேம்பாட்டு முயற்சியான வாழ்விழித் திட்டத்தை துவக்கியுள்ளது.இதன் துவக்க விழா, இடையர்பாளையம், ஸ்ரீ காணியப்ப மாசராயர் வழிபாட்டு மண்டபத்தில் நடந்தது. இந்தத் திட்டம் பாப்பம்பட்டி, கள்ளபாளையம் மற்றும் இடையர்பாளையம் கிராமங்களில் செயல்படுத்தப்படுகிறது.இந்த திட்டம்,குழந்தைகளிடையே கற்றல் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியை மேம்படுத்துதல், பெண்களுக்கு பொருளாதார சுதந்திரத்தை ஆதரித்தல், தொழில் முனைவோர் திறன் மேம்பாடு,சுகாதாரப் பராமரிப்பு மற்றும் குழந்தைப் பருவ மேம்பாடு ஆகியவற்றை ஒரே திட்டத்தின் கீழ் ஒருங்கிணைத்து, முழுமையான கிராமப்புற மேம்பாட்டிற்கு வழிவகை செய்கிறது.கோவை வாக்கரூ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நவுசாத் என்.எம்.சி.டி.,நிறுவனர் சங்கரநாராயணன் ஆகியோர் திட்டத்தை துவக்கி வைத்தனர். சுல்தான்பேட்டை பி.டி.ஓ., சிவகாமி, மற்றும் சிக்கந்தர்பாட்சா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி