உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நடைப்பயிற்சியால் நோயை விரட்டலாம்

நடைப்பயிற்சியால் நோயை விரட்டலாம்

அன்னுார்; 'நடைப்பயிற்சியால் நோயை விரட்டலாம்,' என, மருத்துவ முகாமில் தெரிவிக்கப்பட்டது. குன்னத்துார், கடத்துார், கணேசபுரம் ஆகிய கிராமங்களில், சென்னை, மீனாட்சி உடற்பயிற்சி சிகிச்சை கல்லுாரி சார்பில், ஆறு நாள் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில், பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து, சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆரோக்கிய விழிப்புணர்வு அறிவுரைகள் வழங்கப்பட்டன.நிறைவு விழாவில், கல்லுாரி பேராசிரியர்கள் பேசுகையில், ''நடை, ஓட்டம், உடற்பயிற்சி தொடர்ந்து செய்வதன் வாயிலாக நோய் நம்மை அணுகாமல் எளிதில் விரட்டலாம். துரித உணவு, மது, புகையிலை ஆகியவற்றை தவிர்த்தால் ஆரோக்கியமாக வாழலாம். ஆரோக்கியமான வாழ்க்கை வாழ, சத்தான உணவுகளை உண்டு உடற்பயிற்சி செய்ய வேண்டும்,'' என்றனர். நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் கீதா தங்கராஜ், துணைத்தலைவர் மூர்த்தி மற்றும் கல்லூரி மாணவியர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ