உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாலிபர் கொலையா? போலீசார் விசாரணை

வாலிபர் கொலையா? போலீசார் விசாரணை

பொள்ளாச்சி; பொள்ளாச்சி, சின்னாம்பாளையத்தில், காயங்களுடன் வாலிபர் இறந்து கிடந்தது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர். பொள்ளாச்சி அருகே, சின்னாம்பாளையம் டாஸ்மாக் மதுக்கடை செல்லும் வழியில், தனியார் ஆட்டோ கேரேஜ் அருகே, புதரில், 30 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடப்பதாக, அவ்வழியாக சென்றோர் கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், இறந்து கிடந்த நபரின் கண்களில் காயங்கள் ஏற்பட்டிருந்ததால், கொலை செய்து சடலத்தை வீசியிருப்பார்களோ என்ற சந்தேகத்தின் பெயரில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை