உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வீணாகும் நிழற்கூரை; மக்கள் அதிருப்தி

வீணாகும் நிழற்கூரை; மக்கள் அதிருப்தி

பொள்ளாச்சி; அங்கலக்குறிச்சியில் பல லட்சம் ரூபாய் மதிப்பில், நிழற்கூரை அமைக்கப்பட்டும், பயன்பாடு இல்லாமல் உள்ளது. பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியில் இருந்து, பயணியர் நிழற்கூரை அமைக்கப்படுகிறது. சில பகுதிகளில், பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், டைல்ஸ் ஒட்டி நிழற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில், அங்கலக்குறிச்சியிலும் நிழற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுப்பகுதியைச் சேர்ந்த மக்கள், இந்த நிழற்கூரையை பயன்படுத்தி வந்தனர். ஆனால், நிழற்கூரையை பராமரிக்க உள்ளாட்சி நிர்வாகம் முனைப்பு காட்டாததால், தற்போது பயன்பாடின்றி காணப்படுகிறது. விஷமிகள், இரவு நேரத்தில் மது அருந்தும் இடமாகப் பயன்படுத்துகின்றனர். நிழற்கூரையில் ஒட்டப்பட்டுள்ள 'டைல்ஸ்' சேதமடைந்துள்ளன. மக்கள் கூறியதாவது: நீண்ட நேர இடைவெளியில் பஸ்கள் இயக்கப்படுவதால், பயணியர் பலரும், திறந்தவெளியில் வெயில் மற்றும் மழையில் நிற்க வேண்டியுள்ளது.கிராமங்களில் உள்ள பெரும்பாலான பயணியர் நிழற்கூரைகள் பயன்படுத்த முடியாமல் உள்ளன. சில நிழற்கூரைகள், இரவு நேரத்தில் மது அருந்தும் இடமாக மாறியுள்ளன. சிதிலமடைந்துள்ள நிழற்கூரைகளை கண்டறிந்து, இடித்து அப்புறப்படுத்த வேண்டும். புதிய நிழற்கூரை அமைக்க உள்ளாட்சி அலுவலர்கள் கவனம் செலுத்த வேண்டும்.மக்கள் பயன்படுத்தும் வகையில் நிழற்கூரையை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை