மேலும் செய்திகள்
அடிப்படை வசதி கோரி பேரூராட்சியில் மனு
22-Nov-2024
அன்னுார்; 'தினமலர்' செய்தி எதிரொலியாக தேசிய நெடுஞ்சாலையில் கணேசபுரத்தில் தேங்கிய கழிவு நீர் வெளியேற்றப்பட்டது. கோவை சத்தி தேசிய நெடுஞ்சாலையில், கணேசபுரத்தில், கழிவு நீர் வடிகால் பராமரிப்பு இல்லாமல் கழிவு நீர் தேங்கி நின்றது. 100 மீட்டர் துாரத்திற்கு குளம் போல் தேங்கிய கழிவு நீர் புதிதாக அகலப்படுத்தப்பட்ட சாலையையும் அரித்தது. துர்நாற்றம் வீசியது.இது குறித்து கடந்த 18ம் தேதி 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கணேசபுரத்தில் கழிவுநீர் தேங்கிய இடத்திற்கு நேற்று வந்தனர். பொக்லைன் இயந்திரம் வாயிலாக, கழிவு நீர் செல்லாமல் இருந்த பாலத்தின் அடிப்பகுதியை சுத்தப்படுத்தினர். மண் மேடுகளை அகற்றினர். இதை அடுத்து பல மாதங்களாக தேங்கி நின்ற கழிவு நீர் வெளியேறியது. இதனால் இப்பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதி மக்கள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.
22-Nov-2024