உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பார் மூடக்கோரி ஆர்ப்பாட்டம் 

பார் மூடக்கோரி ஆர்ப்பாட்டம் 

சித்தாபுதூர், ஆக. 21- கருப்பக்கல்தோட்டத்தில் சில நாட்களுக்கு முன் வீட்டில் தனியாக இருந்த பெண் கட்டையால் அடித்து கொல்லப்பட்டார். கொலை செய்த சிறுவன், மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அருகில் மது பார் இருப்பதால், அடிக்கடி தகராறு நடப்பதாகவும் கொலை வரை செல்வதாகவும் அப்பகுதி மக்கள் சிலர் கூறினர். கும்பலாக வந்து மது கூடத்தை மூடும்படி கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  காட்டூர் போலீசார் வந்து மக்களிடம் பேசினர். கடையை மூட, பாரை மூட வேண்டும் என்றால் கலெக்டரிடம் மனு கொடுங்கள்; சாலையை மறைக்காதீர்கள் என்று அறிவுறுத்தினர். பின்னர் மக்கள் கலைந்து சென்றனர். அருகிலும் எதிரிலுமாக மூன்று பார்கள் இருக்கும்போது, ஒரு பாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியது தூண்டுதலாக இருக்கலாம் என பார் வாடிக்கையாளர்கள் கூறினர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்