உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பில்லுார் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பில்லுார் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டுப்பாளையம்; பில்லூர் அணைக்கு வினாடிக்கு,16,140 கன அடி தண்ணீர் வருவதால், இரண்டாவது நாளாக நிரம்பி வழிகிறது. கோவை, நீலகிரி மாவட்ட எல்லை வனப்பகுதியில், பில்லூர் அணை கட்டப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்ட உயரம், 100 அடியாகும். அணையின் பாதுகாப்பு கருதி, 97 அடிக்கு நீர்மட்டம் உயரும் போது, பவானி ஆற்றில் திறந்து விடப்படும். பில்லூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில், கனமழை பெய்து வருவதை அடுத்து, நேற்று முன்தினம் நள்ளிரவு அணையில் நீர்மட்டம், 97 அடியை எட்டி, அணை நிரம்பி வழிந்தது. தொடர்ந்து அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால், அணைக்கு அதிகளவில் தண்ணீர் வந்து கொண்டுள்ளது. நேற்று மதியம் அணைக்கு வினாடிக்கு, 16 ஆயிரத்து, 140 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் இரண்டாவது நாளாக பில்லூர் அணை நிரம்பி வழிகிறது. அணையில் தேங்கியுள்ள தண்ணீர், கடல் போல் காட்சி அளிக்கிறது.மேலும் அணை ஏற்கனவே நிரம்பியுள்ளதால், அணைக்கு வருகின்ற தண்ணீர் முழுவதையும், அப்படியே மதகுகள் மற்றும் மின் உற்பத்தி செய்ய, பவானி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி