மேலும் செய்திகள்
புதிய மேல்நிலை தொட்டி பயன்பாட்டுக்கு வந்தாச்சு!
24-Sep-2024
பொள்ளாச்சி : பொள்ளாச்சி, தாளக்கரை ஊராட்சியில் குடியிருப்பு பகுதிகளில், புதிதாக குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சி, தாளக்கரை ஊராட்சி, நல்லிக்கவுண்டன்பாளையம் குடியிருப்பு பகுதியில், பொதுமக்கள் பயன்பெறும் வகையில், ஜல் ஜீவன் திட்டத்தில், 350 வீடுகளுக்கு புதிதாக குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.இதை கிணத்துக்கடவு எம்.எல்.ஏ., தாமோதரன் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதில், ஊராட்சி நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.எம்.எல்.ஏ., கூறுகையில், ''சில நாட்களாக இப்பகுதியில் உள்ளவர்களுக்கு, குடிநீர் குழாய் வசதி பற்றாக்குறையாக இருந்தது. தற்போது, ஜல் ஜீவன் திட்டத்தின் வாயிலாக நிறைவேற்றப்பட்டுள்ளது.இன்னும் ஒரு சில குடியிருப்புகளில் குடிநீர் குழாய் வசதி இல்லை. இங்கும் குடிநீர் குழாய் வசதிகள் ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்பட்டு, 100 சதவீதம் குடிநீர் வசதி செய்துதரப்படும்,'' என்றார்.
24-Sep-2024