உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குடிநீர் திட்ட ஊழியர் போராட்டம் வாபஸ்

குடிநீர் திட்ட ஊழியர் போராட்டம் வாபஸ்

உடுமலை ;திருமூர்த்தி அணை கூட்டு குடிநீர் திட்டங்களை இயக்கும், தொழிலாளர்களின் போராட்டம் பேச்சு வார்த்தை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.திருமூர்த்தி அணை, தளி கால்வாயை ஆதாரமாக கொண்டு, குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், மடத்துக்குளம், குடிமங்கலம், கணக்கம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுகின்றன. மேலும், புதிய மடத்துக்குளம் கூட்டு குடிநீர் திட்டம், பூலாங்கிணர் குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்படுகிறது.இத்திட்டத்தில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றும், 60க்கும் மேற்பட்டோர், ஊதிய உயர்வு மற்றும் தீபாவளி போனஸ் கோரி, நேற்று முன்தினம் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், குடிநீர் வினியோகத்தில் சிக்கல் ஏற்பட்டது.இந்நிலையில், தொழிலாளர்களுடன் அதிகாரிகள் பேச்சு நடத்தினர். அதில், தொழிலாளர் நலத்துறை வாயிலாக, ஒப்பந்தம் எடுத்தவர்களிடம் பேசி, ஊதிய உயர்வு மற்றும் போனஸ் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதனையடுத்து, தொழிலாளர்கள் போராட்டத்தை ஒத்திவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை