மேலும் செய்திகள்
மரம் வளர்த்தல் குறித்த நிகழ்ச்சி
30-Sep-2024
மேட்டுப்பாளையம்: ''வணிக ரீதியாக மரம் வளர்ப்பதன் மூலம், நாம், நம் நாட்டின் மர தேவைகளை, நாமே பூர்த்தி செய்து கொள்ள முடியும்,'' என வனக்கல்லூரி முதல்வர் பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.வேளாண் காடுகள் சார்ந்த தொழில் முனைவோருக்கான, வணிக ரீதியில் மரம் வளர்ப்பு பயிற்சி, மேட்டுப்பாளையம் வனக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வணிக காப்பகத்தில் நடந்தது. இந்த பயிற்சியில் 30 பேர் பங்கு பெற்றனர்.----கல்லுாரி முதல்வர் பாலசுப்ரமணியம் தலைமை வகித்தார். இந்த பயிற்சியில், வணிக மரக்கன்று உற்பத்திக்கான நாற்றங்கால் நடைமுறைகள், தோட்ட எச்சங்கள் மேலாண்மை நுட்பங்கள், மரக்காப்பீடு மற்றும் கார்பன் கிரெடிட், மர போக்குவரத்து விதிகள், துல்லிய மரம் வளர்ப்பு நடைமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.முதல்வர் பாலசுப்பிரமணியம் பேசுகையில், ''வணிகரீதியாக மரம் வளர்ப்பதன் மூலம், நாம் நம் நாட்டின் மர தேவைகளை நாமே பூர்த்தி செய்து கொள்ள முடியும். தேக்கு, சால், செஞ்சந்தனம், சந்தனம், குமிழ், யூகலிப்டஸ், சவுக்கு போன்றவை வணிக ரீதியாக வளர்க்க ஏற்ற மரங்கள் ஆகும். இதன் மூலம் இளைஞர்கள், பட்டதாரிகள் மற்றும் தொழில் முனைவோர் வேளாண் காடுகள் சார்ந்த தொழில் செய்து வாழ்க்கையில் மேம்படலாம்,'' என்றார்.
30-Sep-2024