உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 25 லட்சம் லிட்டர் குடிநீர் வேண்டும் ; கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்

25 லட்சம் லிட்டர் குடிநீர் வேண்டும் ; கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்

மேட்டுப்பாளையம்; மருதூர் ஊராட்சிக்கு அத்திக்கடவு குடிநீர் திட்டத்தில் 25 லட்சம் லிட்டர் குடிநீர் வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியம், மருதூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம், ஊராட்சி தலைவர் பூர்ணிமா தலைமையில் நடந்தது.கூட்டத்தில், 'மருதூர் ஊராட்சியில் உள்ள 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு, ஜல் ஜீவன் திட்டத்தில் விடுதோறும் குடிநீர் இணைப்பு வழங்கும் பணி 90 சதவீதம் முடிந்துள்ள நிலையில், மீதம் உள்ள 10 சதவீத பணிகளை டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க வேண்டும். மருதூரில் தொழில் முனைவோர்கள் உருவாக்கப்பட வேண்டும். கொத்தடிமைகள், குழந்தை தொழிலாளர்கள் இல்லாததை உறுதிப்படுத்த வேண்டும். தினமும் 25 லட்சம் குடிநீர் அத்திக்கடவு கூட்டு குடிநீர் திட்டத்தில் மருதூருக்கு வழங்க வேண்டும்' உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.சிக்காரம்பாளையம் ஊராட்சியில், ஊராட்சி தலைவர் ஞானசேகரன் தலைமையில் நடந்த கூட்டத்தில், சட்டவிரோதமாக கனிமவளம் கடத்தப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.---


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !