வேர்மேட் கண்காட்சி ஆக.1ல் துவக்கம்
கோவை; கொடிசியா தொழில் கண்காட்சி வளாகத்தில் வேர்மேட் 2025 கண்காட்சி வரும் ஆகஸ்ட் 1ல் துவங்குகிறது. நான்கு நாள் நடக்கும் இந்த கண்காட்சியில், பேக்கேஜிங், பிளாஸ்டிக், சேமிப்பு கலன் தொழில்நுட்பங்கள் இடம் பெறுகின்றன. சின்னவேடம்பட்டி இன்டஸ்ட்ரியல் சங்கம் (சிஐஏ) இணைந்து நடத்தும் இந்த கண்காட்சியில், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் பங்கேற்கின்றன. கண்காட்சி குறித்து, கொடிசியா தலைவர் கார்த்திகேயன், சிஐஏ தலைவர் தேவகுமார், டேக்ட் ஜேம்ஸ் கூறுகையில், “கோவையில் ஐந்தாவது முறையாக இந்த கண்காட்சி நடக்கிறது. பேக்கேஜிங் இயந்திரங்கள், கிடங்குகள், பிளாஸ்டிக் தொழில்நுட்பங்கள் இடம் பெறுகின்றன. அச்சிடுவதற்கான மூலப்பொருட்கள், துணைப் பொருட்கள், ஆட்டோமேஷன், ரோபாட்டிக்ஸ், ஏசி மற்றும் தொழில்துறை கட்டுப்பாடு அரங்குகள் இடம் பெறுகின்றன. 200க்கும் மேற்பட்ட அரங்குகளில் நடக்கும் நிகழ்வில், பல முன்னணி இயந்திரங்கள், பிளாஸ்டிக் தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்கின்றன,” என்றனர்.