உள்ளூர் செய்திகள்

வாரவாரம் ஆரவாரம்

பசுமை தொழில்நுட்பம்

நிலையான உணவு உற்பத்தி மற்றும் பதப்படுத்துதலுக்கான பசுமை தொழில்நுட்பம் குறித்த தேசிய கருத்தரங்கு. இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில் இயந்திர பொறியியல் துறை சார்பில் மாணவர்களின் திறன் மேம்பாட்டு பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நாள்: 25ம் தேதி இடம்: இந்துஸ்தான் பொறியியல் கல்லுாரி, ஒத்தக்கால்மண்டபம்.நேரம்: காலை, 9:30 மணி.

நற்பண்பு மேலாண்மை

நாடு, மதம், இனம் போன்ற வேறுபாடுகள் இல்லாமல் அனைவருக்கும், அனைத்து காலங்களுக்கும் ஏற்றவாறு கருத்துக்களை வழங்கும் உலக பொதுமறை திருக்குறள். திருக்குறள் பார்வையில் நற்பண்பு மேலாண்மை பயிலரங்கு திருக்குறள் உலகம் கல்விச்சாலை சார்பில் நடத்தப்படுகிறது.நாள்: 26ம் தேதி. இடம்: விவேகானந்தர் இல்ல பள்ளி வளாகம், மலர் அங்காடி. நேரம்: மாலை, 6:30 மணி முதல்.

அடிக்கல் நாட்டு விழா

கோவை மெட்ரொபாலிஸ் ரோட்டரி சங்கம் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், அரசம்பாளையம் கிராமம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடக்கிறது.நாள்: 25ம் தேதிஇடம்: அரசு உயர்நிலைப்பள்ளி, அரசம்பாளையம்.நேரம்: மாலை, 4:00 மணி.

கம்பெடுத்தால் சொல்லி அடிப்பேன்

பள்ளிக்கல்வித்துறை சார்பில், வருவாய் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் இன்று முதல் 29ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், சிலம்பம், ஜூடோ, டேக்வாண்டோ, குத்துச்சண்டை, வாள்வீச்சு ஆகிய தற்காப்பு கலை சார்ந்த விளையாட்டு போட்டிகளில் நுாற்றுக்கணக்கான வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.நாள்: 25ம் தேதி துவக்கம்இடம்: இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரி.நேரம்: காலை, 8:00 மணி.

ஒயிலாட்ட அரங்கேற்ற விழா

பாடல், உரையாடல், ஆடலுடன் பார்வையாளர்களை அசத்தும் நாட்டுபுற கலை இந்த ஒயிலாட்டம். கோவை தாளியூர் பேரூராட்சி கலிக்கநாயக்கன்பாளையம் சங்மம் சார்பில் ஒயிலாட்ட அரங்கேற்ற விழா நடைபெறவுள்ளது.நாள்: 26ம் தேதிஇடம்: தண்டுமாரியம்மன், மாகாளியம்மன் கோவில் வளாகம், கலிக்கநாயக்கன்பாளையம்நேரம்: மாலை, 5:00 மணி.

நாம் சிரித்தால் தீபாவளி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை மீடியா சார்பில் 'சிரிப்பு மன்றம்' பட்டிமன்ற நிகழ்வு சுந்தராபுரம் செங்கப்பகோனார் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. நட்சத்திர பேச்சாளர்கள் பங்கேற்று, சிரிப்பை மையமாக கொண்ட தலைப்பில் பேசி பார்வையாளர்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கவுள்ளனர்.நாள்: 26ம் தேதிஇடம்: செங்கப்பகோனார் மண்டபம், சுந்தராபுரம்.நேரம்: மாலை, 5:30 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ