டாக்டர் என்.ஜி.பி., கல்லுாரியில் மாணவர்களுக்கு வெல்கம்
கோவை, : டாக்டர் என்.ஜி.பி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் அறிவியல், மேலாண்மை, கணினி வணிக துறை முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. டாக்டர் என்.ஜி.பி.,ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் தலைவர் நல்லா பழனிசாமி தலைமை வகித்தார்.அவர் பேசுகையில், 'மாணவர்கள் கல்வி பயிலும் போதே, தங்களுடைய தனித்திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். காலத்திற்கேற்ப, நவீன தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ள வேண்டும்' என்றார். கல்லுாரியின் செயலர் டாக்டர் தவமணிதேவி, 'இளம் பருவத்தில் போதை போன்ற தவறான செயல்களுக்கு, மாணவர்கள் அடிமையாகக் கூடாது. ஒழுக்கத்துடன் கூடிய கல்வியே வாழ்வை உயர்த்தும்' என்றார்.டாக்டர் என்.ஜி.பி.,ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர் டாக்டர் அருண், டாக்டர் என்.ஜி.பி., கல்விக்குழுமங்களின் கல்வி இயக்குனர் மதுரா, அறக்கட்டளை முதன்மை செயல் அலுவலர் புவனேஸ்வரன், கல்லுாரியின் கல்விசார் இயக்குனர் முத்துசாமி,முதல்வர் சரவணன், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.