மேலும் செய்திகள்
'மாணவர்கள் சுயதொழில் துவங்க முன்வர வேண்டும்'
09-Aug-2025
கோவை; பார்க் கல்விக் குழுமத்தின் மூன்று பொறியியல் கல்லுாரிகள் மற்றும் ஒரு ஆர்கிடெக்ச்சர் கல்லுாரியின் முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி, கருமத்தம்பட்டியில் உள்ள கல்லுாரி வளாகத்தில் நடந்தது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, தொகுப்பாளர் கோபிநாத் பேசுகையில், ''ஒவ்வொரு நாளையும் திட்டமிட்டு செலவழிக்க வேண்டும். இலக்கில் வெற்றியடைய, வாழ்வில் உயர்ந்தநிலைக்கு செல்ல நேர நிர்வாகம் முக்கியம்,'' என்றார். முன்னாள் மாணவரும், அமெரிக்காவின் கார் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் துணைத் தலைவருமான ராஜேஷ்குமார் தன்னம்பிக்கை உரையாற்றினார். தமிழக இன்ஜினியரிங் கவுன்சிலிங் தரவரிசையில் சிறந்த இடம் பிடித்த மாணவர்களின் பெற்றோர், தங்க நாணயம் பதித்த சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். பார்க் கல்விக் குழுமத்தின் தலைவர் ரவி, தலைமை செயல் அதிகாரி அனுஷா, பொது மேலாளர் சதீஷ்குமார், பொறியியல் கல்லுாரி இயக்குனர் சக்திவேல் முருகன், பொறியியல் கல்லுாரிகளின் முதல்வர்கள் பிரின்ஸ், லட்சுமணன், கட்டட கலைப்பள்ளி இயக்குனர் சுரேஷ்குமார், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
09-Aug-2025