உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மன்னார்காடுக்கு புதிய பஸ் இயக்குவதற்கு வரவேற்பு

மன்னார்காடுக்கு புதிய பஸ் இயக்குவதற்கு வரவேற்பு

வால்பாறை: வால்பாறையிலிருந்து கோவை வழியாக கேரள மாநிலம் மன்னார்காடு பகுதிக்கு இயக்கப்பட்ட அரசு பஸ்சை எம்.எல்.ஏ., தலைமையில் வரவேற்றனர். வால்பாறை அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் மொத்தம், 38 பஸ்கள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. கோவை, பொள்ளாச்சி, பழநி, திருப்பூர், சேலம், மன்னார்காடு ஆகிய பகுதிகளுக்கு 19 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், வால்பாறையிலிருந்து தினமும் காலை, 5:00 மணிக்கு பொள்ளாச்சி, கோவை, பாலக்காடு வழியாக மன்னார்காடுக்கு கடந்த ஓராண்டாக அரசு பஸ் இயக்கப்படுகிறது. இதனால், இருமாநில மக்கள் பயடைந்தனர். இந்நிலையில், நேற்று முதல் மன்னார்காடுக்கு புதிய பஸ் இயக்கப்பட்டது. இதனை வரவேற்கும் வகையில் கேரள மாநிலம் மன்னார்காடு செல்லும் வழியில் அட்டப்பாடி அடுத்த அகளியில், மன்னார்காடு எம்.எல்.ஏ., சம்சுதீன், கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் வரவேற்றனர். அரசு பஸ் டிரைவர் வடிவேல், கண்டக்டர் சுரேஷ் ஆகியோருக்கு சால்வை அணிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !