உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சனாதன தர்ம விழிப்புணர்வு யாத்திரைக்கு வரவேற்பு

சனாதன தர்ம விழிப்புணர்வு யாத்திரைக்கு வரவேற்பு

சூலுார்; சூலுார் சுற்றுவட்டார கிராமங்களில், சனாதன தர்ம விழிப்புணர்வு யாத்திரைக்கு பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர்.சென்னையை சேர்ந்த அறம் வளர்த்த நாயகி சேவை மையம் சார்பில், சனாதன தர்ம விழிப்புணர்வு விஜய யாத்திரை, தமிழகம் முழுவதும் நடந்தது. 63 நாயன்மார்கள், 12 ஆழ்வார்கள், 18 சித்தர்கள் திருவுருவ சிலைகள், கிராமம், கிராமமாக யாத்திரை சென்றது.சூலுார் வட்டார கிராமங்களான சின்னியம்பாளையம், நீலம்பூர், முத்துக்கவுண்டன் புதூர், லட்சுமி நகர், கலங்கல், ராசி பாளையம், அருகம்பாளையம், கரவழி மாதப்பூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு, குலசேகர ஆழ்வார் மற்றும் முருக நாயனார் திருவுருவ சிலைகளுடன் யாத்திரை சென்றது. கோவில் கமிட்டியினர், பக்தர்கள் வரவேற்றனர். சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, சனாதன தர்மத்தை கடைபிடிக்கவும், காப்பாற்றவும் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டு வழிபாடு செய்தனர்.ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் பேசுகையில், சனாதன தர்மத்தை கடைப்பிடித்து வாழ்வது சிறந்த பாக்கியமாகும். எந்த நாட்டிலும் இதுபோன்ற தர்ம வாழ்க்கை முறை கிடையாது. அந்த தர்மத்தை இழிவாக பேசுவோரை கண்டிக்க வேண்டும். அதற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை