உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தி.மு.க., சார்பில் நலத்திட்ட உதவி

தி.மு.க., சார்பில் நலத்திட்ட உதவி

போத்தனூர்; கோவைபுதூரில் முதல்வர் ஸ்டாலினின், 72வது பிறந்த நாள் விழா, வடக்கு மாவட்ட செயலாளர் ரவி தலைமையில் நடந்தது. அமைச்சர் செந்தில்பாலாஜி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.தொடர்ந்து வேஷ்டி, சேலை, குடை, கிரைண்டர், பிரியாணி கிட், தையல் இயந்திரம், விவசாயம், விளையாட்டு உபகரணங்கள். டார்ச் லைட், ஆட்டோ, டெம்போ டிரைவர்களுக்கு சீருடை, மாணவர்களுக்கு லேப்-டாப், கட்சி மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி, கல்வி உதவித்தொகை என, 11 ஆயிரத்து, 72 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நகர, மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ