அங்கன்வாடி மையத்துக்கு நலத்திட்ட உதவிகள்
வால்பாறை; பள்ளி மற்றும் அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளுக்கு, கவுன்சிலர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட நான்காவது வார்டில், ஸ்டான்மோர், சவராங்காடு, புதுத்தோட்டம், லோயர்பாரளை உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் உள்ள துவக்கப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையத்துக்கு, வார்டு கவுன்சிலர் பாஸ்கர், பாய், டம்ளர், சாப்பாட்டு தட்டு மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு குக்கர் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.நிகழ்ச்சியில், ஸ்டான்மோர் பள்ளி தலைமை ஆசிரியர் அழகம்மாள், சவராங்காடு பள்ளி தலைமை ஆசிரியர் லட்சுமி, ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் விஜயா, முருகேஷ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.