உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சர்வதேச பிடே ரேட்டிங் செஸ் போட்டியில் 382 வீரர்கள் சபாஷ்

சர்வதேச பிடே ரேட்டிங் செஸ் போட்டியில் 382 வீரர்கள் சபாஷ்

கோவை: சர்வதேச 'பிடே ரேட்டிங்' செஸ் போட்டியில், 382 வீரர்கள் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில், மூன்றாவது சர்வதேச 'பிடே ரேட்டிங்' செஸ் போட்டி நேற்று முன்தினம் முதல் நடந்து வருகிறது. இதில், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, பீகார், அந்தமான் நிக்கோபார், மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகாவை சேர்ந்த, 382 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.கல்லுாரி முதல்வர் பொன்னுசாமி, மாவட்ட செஸ் சங்க தலைவர் செந்தில் சின்னசாமி ஆகியோர் போட்டிகளை துவக்கிவைத்தனர். இதில், 73 வீரர்கள் முதல் இரண்டு சுற்றுகளில் இரு புள்ளிகள் பெற்று முன்னிலையில் இருந்தனர். போட்டிகள் இன்று நிறைவடைகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை