உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் மேற்கு மண்டலம் அபாரம்! 2023 ஏப்., முதல் 2024 செப்., வரை 91 ஆயிரம் கணக்குகள் துவக்கம்

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் மேற்கு மண்டலம் அபாரம்! 2023 ஏப்., முதல் 2024 செப்., வரை 91 ஆயிரம் கணக்குகள் துவக்கம்

கோவை; பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டத்தில், தபால் துறையில், கோவையை தலைமையிடமாக கொண்ட மேற்கு மண்டலம், சிறப்பான பங்களிப்பு வழங்கியுள்ளது.ஆண்டுதோறும் அக்., 7- முதல் 11 வரை, தேசிய அஞ்சல் வாரம் கொண்டாடப்படுகிறது. பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதில், தமிழ்நாடு வட்டம் தொடர்ந்து எட்டா-வது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளது.பெண் குழந்தைகளின் வளமான எதிர்காலத்துக்காகவும், நிதி பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், மத்திய அரசால் துவங்கப்பட்ட திட்டம் தான் 'சுகன்யா சம்ரித்தி யோஜனா' எனப்படும் செல்வமகள் சேமிப்பு திட்டம். திட்டத்தில் 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு, பெற்றோர் பெயரில் கணக்கு துவங்கலாம்.குறைந்தபட்ச தொகையாக ஒரு நிதியாண்டிற்கு 250 ரூபாய் முதல், அதிகபட்சமாக 1.5 லட்சம் வரை இத்திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். இதுபோல, 15 ஆண்டுகளுக்கு பணம் முதலீடு செய்யலாம். அதன் பிறகு உள்ள 6 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யாமலேயே கூட்டு வட்டி முறையில் வட்டி அளிக்கப்படும்.குழந்தைக்கு 18 வயது ஆனதும், கல்வி செலவுக்கு முதலீட்டிலிருந்து பாதி தொகையை பயன்படுத்திக் கொள்ளலாம். 21 வருடங்கள் கழித்து முதிர்வு தொகை பெற்றுக் கொள்ளலாம்.தமிழக தபால் துறையில், சென்னையை தலைமையிடமாக கொண்டு சென்னை நகர மண்டலம், கோவையை தலைமையிடமாக கொண்டு மேற்கு மண்டலம், திருச்சியை தலைமையிடமாக கொண்டு மத்திய மண்டலம், மதுரையை தலைமையிடமாக கொண்டு தெற்கு மண்டலம் ஆகியவை உள்ளன.மேற்கு மண்டலத்தில், கோவை, திருப்பூர், நீலகிரி, தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், திருப்பத்துார் ஆகிய மாவட்டங்கள் அடங்கியுள்ளன. கோவை மாவட்டத்தில், கோவை மற்றும் பொள்ளாச்சி என இரு கோட்டங்கள் உள்ளன.கோவை கோட்டத்தில், கடந்தாண்டு ஏப்., முதல் நடப்பாண்டு மார்ச் வரை, 8,387, பொள்ளாச்சி கோட்டத்தில், 2,633, தர்மபுரி கோட்டத்தில் 6,724, ஈரோடு கோட்டத்தில் 6, 525, கிருஷ்ணகிரி கோட்டத்தில் 7,607, நாமக்கல் கோட்டத்தில் 5,659, நீலகிரி கோட்டத்தில் 2,296, சேலம் கிழக்கு கோட்டத்தில், 6,097, சேலம் மேற்கு கோட்டத்தில் 4,735, திருப்பத்துார் கோட்டத்தில் 7,755, திருப்பூர் கோட்டத்தில் 10,399 கணக்குகள் என, 68,817 கணக்குகள், செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் துவங்கப்பட்டுள்ளன.நடப்பாண்டு ஏப்., முதல் செப்., வரை, கோவை கோட்டத்தில், 2,923, பொள்ளாச்சி கோட்டத்தில் 802, தர்மபுரி கோட்டத்தில் 1,970, ஈரோடு கோட்டத்தில் 2,392, கிருஷ்ணகிரி கோட்டத்தில் 2,732, நாமக்கல் கோட்டத்தில் 1,836, நீலகிரி கோட்டத்தில் 682, சேலம் கிழக்கு கோட்டத்தில் 2,207, சேலம் மேற்கு கோட்டத்தில், 1,530, திருப்பத்துார் கோட்டத்தில் 2,323, திருப்பூர் கோட்டத்தில் 3,294 என, 22,691 கணக்குகள், செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் துவங்கப்பட்டுள்ளன.கடந்தாண்டு ஏப்., முதல் நடப்பாண்டு செப்., வரை மொத்தமாக, 91,508 கணக்குகள், செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் துவங்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை