உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருப்பதை அறிய என்னென்ன வழிகள்?

 வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருப்பதை அறிய என்னென்ன வழிகள்?

கோவை: வாக்காளர் பட்டியலில் வாக்காளர் பெயர் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய, மொபைலில் குறுஞ்செய்தி வாயிலாக, தகவல் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். கடந்த 19ல், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்பின் அந்தந்த தாலுகா, ஒன்றியம், சட்டசபை தொகுதி அலுவலகங்கள், ஒவ்வொரு ஓட்டுச்சாவடி மையங்களில் வாக்காளர்கள் பெயர் பட்டியலில், இடம் பெற்றுள்ளதா என்பதை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. வாக்காளர்கள் தங்களது மொபைலிலிருந்து, 1950 என்ற எண்ணுக்கு, வாக்காளர் அடையாள அட்டை எண்ணை டைப் செய்து அனுப்பியும், தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என்பதை, உறுதி செய்து கொள்ளலாம். இது தவிர, elections.tn.gov.inஎன்ற இணையத்தில் உள்ளீடு செய்து DRAFT Electoral Roll--- SIR 2026 என்ற பகுதிக்கு சென்று ஆங்கிலம் அல்லது தமிழ் மொழியை தேர்வு செய்து, அதில் பகுதி, பூத், பெயர் ஆகியவற்றை குறிப்பிட்டால், பி.டி.எப்.,பார்மேட்டில் பெயர், விபரம் தெரிய வரும். இதே போல் தேர்தல் கமிஷனின், voters.eci.gov.inதளத்தில் பார்க்கலாம். ECINET மொபைல் செயலியில் இதே போன்று சென்று பார்க்கலாம். பி.எல்.ஓ.,க்களிடம் வரைவு பட்டியலை வாங்கி சரிபார்க்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ