உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பெண் பயணிகள் பாதுகாப்பிற்கு வாட்ஸ் அப் குழு துவக்கம்

பெண் பயணிகள் பாதுகாப்பிற்கு வாட்ஸ் அப் குழு துவக்கம்

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் ரயில்வே போலீசார் சார்பாக பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக தனியாக வாட்ஸ் அப் குழு துவங்கப்பட்டுள்ளது.மேட்டுப்பாளையம் ரயில்வே போலீசார் சார்பாக நேற்று ரயிலில் பயணம் செய்யும் பெண் பயணிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியும், பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக தனியாக வாட்ஸ் அப் குழு தொடக்க விழாவும், மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் ஹாலில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் ஒருபகுதியாக ரயில் பயணத்தின் போது எவ்வாறு பாதுகாப்பாக பயணம் செய்வது, பயணத்தின் போது ஏதேனும் இடர்பாடு ஏற்படும் சமயங்களில் ரயில்வே போலீஸ் உதவி எண் 1512, 9962500500 என்ற வாட்ஸ் அப் எண் மற்றும் 24 மணி நேர காவல் கட்டுப்பாட்டு அறையின் தொடர்பு எண்களும் தெரிவிக்கப்பட்டு, நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி., அதியமான், மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்ன காமணன், காரமடை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் மற்றும் ரயில்வே போலீசார், ரயில்வே பெண் ஊழியர்கள், தன்னார்வலர்கள், தனியார் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் என 300 பேர் கலந்து கொண்டனர்.----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ