உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாட்ஸ்அப் சப்போர்ட் போலீசார் எச்சரிக்கை

வாட்ஸ்அப் சப்போர்ட் போலீசார் எச்சரிக்கை

கோவை, வாட்ஸ்அப் சப்போர்ட்டில் இருந்து அனுப்பப்படுவதாக வரும் தகவல்களை நம்ப வேண்டாம் என, மாநகர சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், 'ஹாய் டா, நான் வாட்ஸ்அப் சப்போர்ட் பேசுறேன். என, மெசேஜ் அனுப்பப்படுகிறது. அதில் வரும் லிங்கை தொடும் போது உங்கள் மொபைல்போன் ஹேக் செய்யப்பட்டு பணம் திருடப்படுகிறது. அதுபோன்ற தகவல்கள் வந்தால் நம்ப வேண்டாம். உடனடியாக பிளாக் செய்ய வேண்டும். இதுபோன்ற தகவல்கள் வந்தால் https://whatsapp.com/contact/forms/1534 4590 9697 4129 என்றமுகவரிக்கு புகார் தெரிவிக்கலாம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை