உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?

 ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?

பொள்ளாச்சி: பொள்ளாச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற பணிகளை விரைந்து முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என, வக்கீல்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொள்ளாச்சியில், ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்க தமிழக அரசு கடந்த 2016ல் கோவை ரோடு, அண்ணா நகர் மேடு பகுதியில், நகராட்சிக்கு சொந்தமான நிலம், 3.25 ஏக்கர் நிலத்தை கோர்ட் வசம் ஒப்படைத்தது. இதை தொடர்ந்து, 10 விசாரணை அறைகள், நீதிபதிகள், அரசு வக்கீல்கள் அறைகள், வக்கீல்கள் சங்க கட்டடம் அமைக்க திட்டமிடப்பட்டது. அதே வளாகத்தில், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றமும், கூடுதல் சார்பு நீதிமன்றமும் அமைக்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. நீதிபதிகள் குடியிருப்புகளும் கட்டப்படுகிறது. மொத்தம், 35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் நடைபெற்றன. இப்பணிகளை தொடர்ந்து, சுற்றுச்சுவர் உள்ளிட்ட வசதிகள் மேம்படுத்தும் வகையில் கூடுதலாக, 15 கோடி ரூபாய் தேவை என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.இதையடுத்து முதல்வர், ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடத்துக்கு கூடுதல் வசதிகளை ஏற்படுத்த ஏதுவாக, 14 கோடியே, 59லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி ஆணையிட்டார். இதையடுத்து, கோர்ட் வளாக பணிகள் தீவிரமடைந்துள்ளன. கோர்ட் வளாகத்தை சுற்றியும் சுற்றுச்சுவர், ப்ளோரிங், கார் பார்க்கிங் மற்றும் ரோடு சமப்படுத்தி கிராவல் மண் கொட்டுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து முகப்பு பகுதிகளில் சீரமைக்கும் பணிகள் நடக்கிறது. இப்பணிகள் விரைவில் முடிந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என வக்கீல்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி