மேலும் செய்திகள்
பள்ளிகள் துவங்கும் முன் பாடப்புத்தகங்கள் சப்ளை
03-May-2025
மேட்டுப்பாளையம்; தமிழக அரசு, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள, மாணவ, மாணவிகளுக்கு பாடப் புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள், பேக் (புத்தக பை) மற்றும் காலணிகள் ஆகியவை ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது. பள்ளி விடுமுறை விட்டு, 20 நாட்கள் ஆகிறது. இன்னும் பத்து நாட்களில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. wஇந்நிலையில் மாணவ, மாணவிகளுக்கு பாடப் புத்தகங்கள் இன்னும் பள்ளிகளுக்கு வரவில்லை. எப்போது பாட புத்தகங்கள், சீருடைகள் குழந்தைகளுக்கு வழங்குவார்கள் என, பெற்றோர் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறுகையில்,' ஒவ்வொரு பள்ளிக்கும் தேவையான பாட புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள் ஆகிய அளவுகள் குறித்து, வட்டார கல்வி அலுவலருக்கு அனுப்பி உள்ளோம். அதன் அடிப்படையில் புத்தகங்கள், நோட்டுகள் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்படும். நோட், புத்தகங்கள் வந்தவுடன் வகுப்பு வாரியாக பிரித்து, மாணவர்களுக்கு வழங்கப்படும்,' என்றனர்.
03-May-2025