மேலும் செய்திகள்
காட்டுப்பன்றிகளை பிடிக்க விவசாயிகள் கோரிக்கை
24-Dec-2024
பெ.நா.பாளையம் ;கோவை வடக்கு பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையோர கிராமங்களில் தென்னை, வாழை, சோளம், காய்கறி உள்ளிட்டவை பயிரிடப்பட்டு உள்ளன. ஏற்கனவே யானை, மயில், மான் உள்ளிட்ட வன விலங்குகளின் தொல்லையால், வேளாண் பயிர்கள் ஏராளமாக சேதம் அடைந்து வருகின்றன.குறிப்பாக, காட்டு யானைகளால் ஏற்படும் சேதாரத்தை கட்டுப்படுத்த, வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பது காவலர்கள் விடிய, விடிய பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தாலும், வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்தை முழுமையாக கட்டுப்படுத்த இயலவில்லை.இந்நிலை யில், காட்டு பன்றிகளால் ஏற்படும் சேதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை வேளாண் நிலங்களில் உள்ள கோரை புற்களின் கிழங்குகளை மட்டும் ருசித்த காட்டு பன்றிகள், தற்போது வாழை மரத்தின் அடிப்பகுதியில் உள்ள தண்டுகளையும், குலை தள்ளிய வாழை மரங்களை கீழே தள்ளி, அதில் உள்ள வாழை காய்களை ருசிக்க தொடங்கி விட்டன. இது குறித்து, விவசாயிகள் கூறுகையில், '' காட்டு பன்றிகளால் ஏற்படும் சேதத்தின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தோட்டத்துக்குள் காட்டு பன்றிகள் இருரந்தால், அவற்றை நெருங்க முடியாது.பாதுகாக்கப்பட்ட வன விலங்கினங்களின் பட்டியலில் காட்டுப் பன்றிகள் இருப்பதால், விவசாயிகள் அதை துரத்த அச்சப்படுகின்றனர்.கேரளாவில் காட்டுப் பன்றிகளை கொல்ல, உரிய விதிமுறைகள் வகுக்கப்பட்டு இருப்பது போல, தமிழகத்திலும் காட்டு பன்றிகளை வனத்துறையினரின் உதவியோடு அகற்ற, தமிழக அரசு உரிய சட்டம் இயற்றி, நடைமுறைப்படுத்த வேண்டும்' என்றனர்.
24-Dec-2024