உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சர்வீஸ் ரோட்டோரத்தில் தடுப்பு அமைக்கப்படுமா?

சர்வீஸ் ரோட்டோரத்தில் தடுப்பு அமைக்கப்படுமா?

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு சர்வீஸ் ரோட்டில் (பொள்ளாச்சி வழி) நடைபாதை ஓரம் உள்ள இரும்பு தடுப்புகள் ஒரு பகுதியில் மட்டும் இல்லாததால், இவ்வழியாக மக்கள் தேசிய நெடுஞ்சாலையை கடக்கின்றனர். இதனால், ரோட்டில் வேகமாக வரும் வாகனங்கள் தடுமாறுகின்றன. ரோட்டை திடீரென கடக்கும் போது, பாதசாரிகள் மீது வாகனங்கள் மோதி விபத்து ஏற்படுகிறது. குறிப்பாக, இரவு நேரத்தில் உயிரிழப்பு விபத்து ஏற்படுகிறது. விபத்து ஏற்படுவதை தவிர்க்க, இப்பகுதியில் இரும்பு தடுப்பினை தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் அமைக்க வேண்டும். இதே போன்று, வாகனங்கள் மோதி சேதமடைந்த இரும்பு தடுப்புகளை சீரமைக்க வேண்டும், என, வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி