உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கேரளாவை போல நம் மருத்துவமனைகள் மாறுமா?

கேரளாவை போல நம் மருத்துவமனைகள் மாறுமா?

கோவை:'கேரளா போன்ற பிற மாநில அரசு மருத்துவமனைகளை போல, தமிழக அரசு மருத்துவமனைகளிலும், தினமும் படுக்கை விரிப்புகளை மாற்ற வேண்டும்' என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில், பல நாட்களாக சலவை செய்யப்படாத படுக்கை விரிப்புகளே பயன்படுத்தப்படுவதாக, நோயாளிகள் புகார் தெரிவிக்கின்றனர். படுக்கை விரிப்புகளை தினமும் சலவை செய்து, வழங்க வேண்டும் என, நோயாளிகள் எதிர்பார்க்கின்றனர். அண்டை மாநிலமான கேரளாவில், அரசு மருத்துவமனைகளில் படுக்கை விரிப்புகளில், கிழமைகளின் பெயர் அச்சிடப்பட்டுள்ளன. அந்தந்த கிழமைகளுக்கு ஏற்றார்போல், படுக்கை விரிப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.இந்த நடைமுறை, சில மாநிலங்களில் பின்பற்றப்படுகிறது. இந்த நடைமுறையை, தமிழகத்திலும் பின்பற்ற வேண்டும் என்ற கோரிக்கை, பொதுமக்கள் மத்தியில் வலுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !