போலியோ சொட்டு மருந்து இந்தாண்டு வழங்கப்படுமா?
போலியோ எனப்படும், இளம்பிள்ளை வாத நோயை குணப்படுத்த, பிறந்தது முதல் ஐந்து வயதுடைய குழந்தைகளுக்கு, ஆண்டுதோறும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.வழக்கமாக ஏப்ரலில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். நடப்பாண்டு ஏப்ரல் மூன்றாவது வாரமும் முடிய உள்ள நிலையில், போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுவது குறித்து அறிவிப்பு இன்னமும் வெளியாகவில்லை.சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'நம் நாட்டில், 15 ஆண்டுகளுக்கும் மேலாக போலியோ பாதிப்பு இல்லாததால், கடந்த சில ஆண்டுகளாக ஒரு தவணை போலியோ சொட்டு மருந்து மட்டும் வழங்கப்படுகிறது. தேதி அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்,' என்றனர் - நமது நிருபர் -.