உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  ரோட்டோர செடிகள் அகற்றம் செய்யப்படுமா?

 ரோட்டோர செடிகள் அகற்றம் செய்யப்படுமா?

கிணத்துக்கடவு: பட்டணம் --- முள்ளுப்பாடி ரோட்டோரம் செடிகள் வளர்ந்து இருப்பதால், வாகன ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர். கிணத்துக்கடவு அருகே உள்ள பட்டணத்தில் இருந்து, முள்ளுப்பாடி மற்றும் கப்பளாங்கரை செல்லும் ரோடு சில மாதங்களுக்கு முன், முதலமைச்சரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்டது. தற்போது, இந்த ரோட்டின் இரு புறங்களிலும், அதிகளவில் செடிகள் முளைத்து, உயரமாக வளர்ந்திருப்பதால் அவ்வழியில் செல்பவர்கள் சிரமப்படுகின்றனர். இதுமட்டுமின்றி ரோட்டோரம் நடப்பட்ட அறிவிப்பு பலகைகளும், புதர் செடியில் மறைந்துள்ளனன. இதனால், இரவு நேரத்தில் பைக்கில் செல்பவர்கள் வளைவு பகுதி மற்றும் அறிவிப்பு பலகைகள் தெரியாததால், எதிரே வரும் வாகனங்களால் விபத்துக்கு உள்ளாகின்றனர். எனவே, ரோட்டோரத்தில் இருக்கும் செடிகளை அகற்றம் செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை