மருதமலை கோவிலுக்கு லிப்ட் புத்தாண்டில் இயக்கப்படுமா?
வடவள்ளி: மருதமலை வரும் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிரமம் இல்லாமல் முருகன் கோவிலுக்கு செல்லும் வகையில் லிப்ட் அமைக்கும் பணி நடக்கிரது. ரூ.5.2 கோடி செலவில், ராஜ கோபுரத்தின் வலது பக்கம் இரண்டு நிலைகளில் மேலே செல்வதற்கு 2 லிப்ட், கீழே இறங்குவதற்கு 2 லிப்ட் அமைக்கும் வேலையை, 2023 ஏப்ரலில் முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார். பாறைகள் அதிகம் உள்ளதால், 'ஆசிட்' ஊற்றி பாறைகளை உடைக்கும் பணி தாமதம் ஆனது. இரண்டாம் தளத்தில், உயரத்தில் மாற்றம் இருப்பது தெரியவந்தது. புதிய வரைபடம் தயாரிக்கப்பட்டு பணி தொடர்ந்தது. சில மாதங்கள் முன்பு, முதல் தள லிப்ட் பணி முடிந்தது. இரண்டாம் தள பணிகளும் முடியும் நிலையில் உள்ளது. மூன்று ஆண்டு இழுபறியாக இருந்த வேலை முடிந்து, புத்தாண்டில் பயன்பாட்டிற்கு வருமா என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். கோவில் துணை கமிஷனர் செந்தில்குமாரிடம் கேட்டபோது,ஜனவரி மாதம் பயன்பாட்டுக்கு வரும்; தேதி முடிவாகவில்லைஎன்றார்.