உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆர்.டி.ஓ., அறிவிப்பு சீரமைக்கப்படுமா?

ஆர்.டி.ஓ., அறிவிப்பு சீரமைக்கப்படுமா?

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு அருகே, தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில், வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், வைக்கப்பட்ட அறிவிப்பு பலகை சாய்ந்து, கீழே விழும் நிலையில் உள்ளது. பொள்ளாச்சி – கோவை தேசிய நெடுஞ்சாலையில், கிணத்துக்கடவு அருகே சிங்கராம்பாளையம் பிரிவு சர்வீஸ் ரோடு துவங்கும் இடத்தில், ‘அனைத்து பஸ்களும் பஸ் ஸ்டாண்ட் வழியாக செல்ல வேண்டும்,’ என, வட்டார போக்குவரத்து அலுவலக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களாக இந்த அறிவிப்பு பலகையின் கம்பி வளைந்து, கீழே விழும் நிலையில் உள்ளது. இந்த அறிவிப்பு ரோட்டில் சாய்ந்தால் விபத்து ஏற்படும். எனவே, அறிவிப்பு பலகையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை