உள்ளூர் செய்திகள்

பைக் மோதி பெண் பலி

கோவை; கோவை, சிங்காநல்லூர் வரதராஜபுரத்தை சேர்ந்தவர் பத்மாவதி, 48. இவர் அவிநாசி ரோட்டில் உள்ள தனியார் பள்ளி அருகே, ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த நபர், பத்மாவதி மீது மோதி விட்டு நிற்காமல் சென்றார். இதில் பத்மாவதிக்கு தலை, கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.அருகில் இருந்தவர்கள் பத்மாவதியை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற நபரை, போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை