கடைக்காரரை கத்தியால் குத்தி பெண் தப்பியோட்டம்
போத்தனுார்; கோவை, கரும்புக்கடை, சவுகர் நகரை சேர்ந்தவர் அர்ஷத் அஹமது, 33. பிலால் எஸ்டேட்டில் உள்ள இவரது கடையில் பூங்கா நகரை சேர்ந்த ஜைலா வேலை பார்க்கிறார். இவருக்கு, 1,000 ரூபாய் சம்பளத்தொகை கொடுக்க வேண்டும்; பலமுறை கேட்டும் தரவில்லை. நேற்று முன்தினம் கடைக்குச் சென்ற ஜைலா, அர்ஷத் அஹமதுவை கத்தியை காட்டி, மிரட்டிச் சென்றார். தொடர்ந்து பாத்திமா நகர் பள்ளிவாசல் எதிரே ஜைலாவை, வழிமறித்த அர்ஷத் அஹமது, கத்தியை காட்டி மிரட்டியது குறித்து கேட்டு தாக்கியுள்ளார். ஆத்திரமடைந்த ஜைலா, அர்ஷத் அஹமதுவை கத்தியால் குத்தி தப்பினார். அங்கிருந்தோர், அர்ஷத் அஹமதுவை கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கரும்புக்கடை போலீசார், ஜைலாவை தேடுகின்றனர்.