உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சூலுார் தொகுதியில் ஆதிக்கம் செலுத்தும் பெண்கள்

சூலுார் தொகுதியில் ஆதிக்கம் செலுத்தும் பெண்கள்

சூலுார்; கோவை மாவட்டம் சூலுார் தொகுதிக்கான வரைவு வாக்காளர் பட்டியலில், 1 லட்சத்து, 62 ஆயிரத்து, 86 ஆண்கள்,1 லட்சத்து, 72 ஆயிரத்து, 126 பெண்கள், 99 மூன்றாம் பாலினத்தவர் என, 3 லட்சத்து, 34 ஆயிரத்து, 311 வாக்காளர்கள் பெயர்கள் பட்டியலில் உள்ளன. மொத்தம், 10 ஆயிரத்து, 40 பெண் வாக்காளர்கள், ஆண் வாக்காளர்களை விட அதிகம் உள்ளனர்.கடந்த, ஜன., மாத பட்டியல் படி, 1 லட்சத்து, 56 ஆயிரத்து 175 ஆண்களும், 1 லட்சத்து, 65 ஆயிரத்து, 545 பெண்களும், 83 மூன்றாம் பாலினத்தவரும் வாக்காளர்களாக இருந்தனர்.தற்போது,ஆண்களில், 5 ஆயிரத்து, 911 பேரும், பெண்களில், 6 ஆயிரத்து, 581 பேரும், மூன்றாம் பாலினத்தவரில், ஒன்பது பேரும் அதிகரித்துள்ளனர். மொத்தத்தில், சூலுார் தொகுதியில் வெற்றியை நிர்ணயிப்பது பெண்கள் கையில் தான் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை