உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் இடமாற்றம்

மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் இடமாற்றம்

கோவை; தொடர் புகார் எதிரொலியாக கோவை கிழக்கு மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ருக்மணி கட்டுப்பாட்டு அறைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.கோவையில் மகளிர் போலீஸ் ஸ்டேஷன்களில் கட்டப்பஞ்சாயத்து, பணம் பெற்றுக் கொண்டு ஒருதரப்புக்கு ஆதரவாக செயல்படுவது, பிரச்னைகளுடன் வரும் பெண்களிடம் புகார் பெறாமல் சமாதானம் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக புகார் எழுந்தன.இந்நிலையில், கோவை கிழக்கு மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ருக்மணியை, கட்டுப்பாட்டு அறைக்கு பணியிட மாற்றம் செய்து மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் உத்தரவிட்டார். கோவை விமான நிலைய வளாகத்தில், கடந்த சில வாரங்களுக்கு முன் ஹனிமூன் முடித்து விட்டு மனைவியுடன் வந்த வாலிபரிடம், பெண் ஒருவர் தகராறு செய்தார். இக்காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவின. தகராறு செய்த இளம்பெண், ஏற்கனவே கோவை கிழக்கு மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்திருந்தார். அந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரான ருக்மணி, அந்த வாலிபருக்கு ஆதரவாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதிகாரிகள் விசாரணையில் அது நிரூபனமானதாகவும், அதன் அடிப்படையிலேயே ருக்மணி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டதாகவும், போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை