உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  தகவல் பகிரும் முன் பெண்கள் யோசிக்கணும்

 தகவல் பகிரும் முன் பெண்கள் யோசிக்கணும்

கோவை: 'நகர்ப்புற சூழலில் பெண்களின் பாதுகாப்பு' எனும் தலைப்பில், கோவை அரசு கலை கல்லுாரியில் நேற்று கருத்தரங்கு நடந்தது. மாநகர போலீஸ் காட்டூர் உதவி கமிஷனர் கோகுலகிருஷ்ணன் பேசுகையில், ''ஆபத்தில் சிக்கும் போது பெண்களை பாதுகாக்க, பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்தியுள்ளோம். டிஜிட்டல் உலகில் பெண்கள் தங்களது தகவல்களை பொது வெளியில் பகிரும் முன், யோசிக்க வேண்டும். பாதுகாப்புக்காக தற்காப்பு கலைகளை கற்றுக் கொள்வது அவசியம். அவசர காலங்களில் துணிச்சலுடன் செயல்பட்டு, போலீசாரை அணுகவேண்டும்,'' என்றார். கல்லுாரி தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் செல்வராஜ் வரவேற்றார். முதல்வர் எழிலி தலைமை வகித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ