நகை கடையில் திருடிய பெண்கள்
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் உள்ள காந்தி சிலை அருகே நகைக்கடை ஒன்று உள்ளது. கடந்த 6ம் தேதி மாலை இரு பெண்கள் இக்கடைக்கு வந்துள்ளனர். இவர்கள் நகை வாங்க வந்துள்ளதாக கூறியுள்ளனர். அப்போது, கடையின் பெண் ஊழியர், நகைகளை காண்பித்துள்ளார். ஊழியர் அசந்த வேளையில், கில்லாடி பெண்கள் தாங்கள் ஏற்கனவே கைப்பையில் தயாராக வைத்திருந்த கவரிங் நகையை வைத்து விட்டு தங்க நகையை எடுத்து சென்றுள்ளனர். அவர்கள் சென்ற பின் கடையின் ஊழியர் நகைகளை சரிபார்த்த போது 10 கிராம் வரை எடை யுள்ள தங்க நகை திருட்டு போனது தெரியவந்தது. மேட்டுப்பாளையம் போலீசார் விசாரிக்கி ன்றனர்.