மேலும் செய்திகள்
ஸ்ரீ சவுடேஸ்வரி அறக்கட்டளை பொன்விழா
24-Feb-2025
பொள்ளாச்சி; பொள்ளாச்சி ஈஸ்வரி சமூக சேவை அறக்கட்டளை, நேஷனல் ஹிந்து பவுண்டேஷன் அண்ட் டிரஸ்ட் சார்பில், மகளிர் தினம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, மின்நகர், தனியார் அரங்கில் நடந்தது.விழாவுக்கு, அறக்கட்டளை தலைவர் சங்கரேஸ்வரி தலைமை வகித்தார். மாரியம்மாள் பள்ளி தலைமையாசிரியர் சகிலா, தி.மு.க., சிறுபான்மை பிரிவு கோவை தெற்கு மாவட்ட துணை அமைப்பாளர் காஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில், சாதனை செம்மல் விருதுகளும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. அரசு பள்ளி குழந்தைகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.வில்லிசைக் கலைஞர் அழகுசெல்வி, தன்னம்பிக்கை பேச்சாளர் மைதிலி, திருப்பூர் தெற்கு ரோட்டரி சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
24-Feb-2025