உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குமரன் குன்றில் மண்டபம் கட்டும் பணி துவக்கம்

குமரன் குன்றில் மண்டபம் கட்டும் பணி துவக்கம்

அன்னுார்;குமரன் குன்று கோவிலில், 75 லட்சம் ரூபாயில் மண்டபம் கட்டும் பணி நேற்று தொடங்கியது. அன்னுாரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பாதையில் உள்ள பல நூறு ஆண்டுகள் பழமையான குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவில் பிரசித்தி பெற்றது. குன்றின் மீது உள்ள கோவிலில் மண்டபம் கட்ட, பக்தர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, இந்து சமய அறநிலையத் துறை இதற்கு அனுமதி வழங்கியது.இதைத் தொடர்ந்து, 75 லட்சம் ரூபாயில், சுற்றுப் பிரகாரத்தில் மண்டபம் கட்டும் பணி பூமி பூஜையுடன் நேற்று துவங்கியது. அறங்காவலர் குழு தலைவர் செல்வகுமார் பணியை துவக்கி வைத்தார்.அறங்காவலர்கள் சண்முகசுந்தரம், சரோஜினி, பழனிச்சாமி, ராமச்சந்திரன், முன்னாள் அறங்காவலர்கள், ஊராட்சித் தலைவர்கள், பக்தர்கள் பங்கேற்றனர். பல ஆண்டு கோரிக்கை நிறைவேறியதால் பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை