உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பணியிட பாதுகாப்பை வலியுறுத்தி வேலை புறக்கணித்து போராட்டம்

பணியிட பாதுகாப்பை வலியுறுத்தி வேலை புறக்கணித்து போராட்டம்

- நிருபர் குழு -தமிழக அரசு, நகர்புற நிலவரித்திட்ட பணியிடங்களை குறைப்பதற்காக நடவடிக்கைகளை எடுப்பதாக கூறப்படுகிறது. மேலும், வருவாய் துறையில் இருந்து வரும் பல்வேறு பணியிடங்களை கலைப்பதற்கு அரசு ஆயத்தமாகி வருகிறது. அதில், 97 பேரிடர் மேலாண்மை பணியிடங்கள் கலைக்கப்பட்டுள்ளன.கோரிக்கைகளை வலியுறுத்தியும், பணியிடங்களை பாதுகாத்துக்கொள்ளும் வகையில், தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர், பணியை புறக்கணித்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் நடந்த போராட்டத்தில், பொள்ளாச்சி கோட்ட துணை தலைவர் அபீப்ரகுமான் தலைமை வகித்தார். பொள்ளாச்சி வட்டக்கிளை தலைவர் மகேஷ் முன்னிலை வகித்தார். மாவட்ட துணை தலைவர் சங்கர் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர் கூறியதாவது:முதுநிலை வருவாய் ஆய்வாளர் பதவி உயர்வில் ஏற்பட்டுள்ள தேக்க நிலையை களைந்து, ஒருங்கிணைந்த பணி முதுநிலை தொடர்பாக தெளிவுரைகளை வருவாய் நிர்வாக ஆணையர் உடனடியாக வெளியிட வேண்டும். கருணை அடிப்படையில் பணி நியமனத்துக்கான உச்ச வரம்பினை ஐந்து சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதை ரத்து செய்து, 25 சதவீதமாக நிர்ணயம் செய்ய வேண்டும்.வருவாய்துறையில் உள்ள பணியிடங்கள் கலைக்கப்பட எடுக்கும் நடவடிக்கைகளை அரசு முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். பேரிடர் மேலாண்மை பிரிவில் கலைக்கப்பட்ட, 97 பணியிடங்களை உடனடியாக வழங்க வேண்டும். இவை உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.இவ்வாறு, கூறினர்.போராட்டத்தில், தாலுகா, சப் - கலெக்டர், ஆதிதிராவிடர் நல அலுவலகங்கள், முத்திரைத்தாள் அலுவலகம், கோட்டக்கல் அலுவலகம், குடிமைப்பொருள், தேர்தல் பிரிவு, சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகங்களை சேர்ந்த, 35 பேர் பங்கேற்றனர். கிணத்துக்கடவு தாலுகாவில், 13, ஆனைமலை தாலுகாவில், 16 பேர் போராட்டத்தில் பங்கேற்றனர்.

உடுமலை

உடுமலையில், வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில், தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் விவேகானந்தன் தலைமை வகித்தார். தாசில்தார் சுந்தரம் உட்பட, 21 பேர் பங்கேற்றனர். அதே போல், உடுமலை கோட்டாட்சியர் அலுவலகம், மடத்துக்குளம் தாலுகா அலுவலகத்திலும், வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ