உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு மருத்துவமனையில் இணைப்பு பாலம் அமைக்க பணிகள் விறுவிறு

அரசு மருத்துவமனையில் இணைப்பு பாலம் அமைக்க பணிகள் விறுவிறு

கோவை: கோவை அரசு மருத்துவமனையில், இரண்டு கட்டடங்களுக்கு இடையில் பாலம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு, பூமி பூஜை போட்டு பத்து மாதங்கள் கடந்தும் பணிகள் துவக்கப்படவில்லை. இந்நிலையில், இணைப்பு பாலத்தின் அமைப்புகளின் மாற்றம் செய்து மீண்டும் கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லுாரிக்கு கோவை மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நோயாளிகள் வந்து செல்கின்றனர். நாள் ஒன்றுக்கு, உள், புற நோயாளிகளாக 10 ஆயிரம் பேர் சிகிச்சை பெறுகின்றனர். 2024 மார்ச் மாதம் 287 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய பல்நோக்கு நவீன சிகிச்சை கட்டடம் பயன்பாட்டுக்கு வந்தது. இங்கு, 300 படுக்கை வசதிகள், 10 அறுவைசிகிச்சை அரங்குகள், நவீன ஆய்வகங்கள் உள்ளன. தரைத்தளத்தில், அவசர சிகிச்சை பிரிவு செயல்படுகிறது. இக்கட்டடம் அருகில் உள்ள 2016ம் ஆண்டு கட்டப்பட்ட கட்டடத்தில், ஸ்கேன் பிரிவு உட்பட பல்வேறு முக்கிய சிகிச்சை பிரிவுகள் உள்ளன. இந்த இரு கட்டடங்களுக்கும் இடையில், பாலம் அமைக்கப்பட்டால் சிகிச்சை செயல்பாடுகள் எளிதாக்கப்படும். நோயாளிகள் அலைக்கழிப்புக்கு ஆளாகாமல் பரிசோதனைகள் மேற்கொள்ள இயலும். இதன் காரணமாக, இணைப்பு பாலம் கான்கிரீட்டில் அமைக்க, 1.67 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, கடந்த ஜன., மாதம் பூமி பூஜை போடப்பட்டது. ஆனால், பணிகள் துவக்கப்படவில்லை. பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'மருத்துவமனை தரப்பில் கானகிரீட் இணைப்பு பாலமாக அல்லாமல், இரும்பால் ஆன பாலம் அமைத்து தர கோரியுள்ளனர். இதனால், கட்டமைப்பில், கட்டுமான பணிகளில் சில மாற்றங்கள் மேற்கொள்ளவேண்டி இருந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் வருவதால், சில செயல்பாடுகளை திட்டமிட வேண்டியுள்ளது. இதனால், ஸ்டீல் பயன்படுத்தி கட்டுமானம் அமைக்க, அறிக்கை கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி