அன்னுாரில் குறுகிய பாலம் அகலப்படுத்தும் பணி தீவிரம்
அன்னுார்: அன்னுார், மேட்டுப்பாளையம் சாலையில், குறுகிய பாலத்திற்கு விடிவு பிறக்கிறது. அன்னூரில், மேட்டுப்பாளையம் சாலையில் மின் மயானத்தை அடுத்து குறுகிய சிறிய பாலம் உள்ளது. இதனால் வேகமாக வரும் கனரக வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. அவிநாசியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு நான்கு வழி சாலை அமைக்கும் திட்டத்தில் இந்த அகலமான பாலம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து கடந்த இரு வாரங்களாக மூன்று கனரக வாகனங்கள் செல்லும் அளவிற்கு அகலமான பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அடித்தளத்தில் நேற்று கான்கிரீட் ஊற்றும் பணி நடந்தது. நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், இப்பணிகளை கண்காணித்தனர்.