உள்ளூர் செய்திகள்

தொழிலாளி பலி

கோவில்பாளையம்: கோவையைச் சேர்ந்த ரத்தினவேல் மகன் விஜயகுமார், 35. இவர் பீளமேட்டில் உள்ள டைடல் பார்க்கில் கேண்டின் ஊழியராக பணிபுரிந்து வந்தார். கடந்த 13ம் தேதி இரவு 9:15 மணிக்கு, குரும்பபாளையத்தை அடுத்த வையாபுரி நகர் ஆர்ச் எதிரில் சத்தி சாலையை கடக்க முயன்றார். அப்போது அங்கு வேகமாக வந்த நான்கு சக்கர வாகனம் ஒன்று, விஜயகுமார் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த விஜயகுமார் சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். கோவில் பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்