உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிட்கோ தொழிற்பேட்டையில் தொழிலாளர் தங்கும் விடுதி திறப்பு

சிட்கோ தொழிற்பேட்டையில் தொழிலாளர் தங்கும் விடுதி திறப்பு

போத்தனூர்; கோவை சிட்கோ தொழிற்பேட்டையில், புதியதாக கட்டப்பட்ட தொழிலாளர் தங்கும் விடுதி திறப்பு விழா நடந்தது.சுந்தராபுரம் அடுத்து சிட்கோ தொழிற்பேட்டையில், 23 கோடி ரூபாய் மதிப்பில் தொழிலாளர் தங்கும் விடுதி, 1,4 ஏக்கர் பரப்பில் மூன்று தளங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதனை முதல்வர், காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.இதுகுறித்து, கொசிமா முன்னாள் தலைவர் நல்லதம்பி கூறியதாவது: சிட்கோ சார்பில், சிட்பி மூலம், 23 கோடி ரூபாய் மதிப்பில் சுமார், 65 ஆயிரம் சதுரடி பரப்பில் 111 அறைகளுடன் விடுதி கட்டப்பட்டுள்ளது. நான்கு பேர் தங்கும் அறையில் சமையல், கழிவறை வசதியும், ஆறு பேர் தங்கும் அறையில் சமைய லறை வசதி மட்டும் கொண்டதாக அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒருவருக்கு மாதம், ஆயிரத்து, 200 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். அத்துடன் பராமரிப்பு தொகையும் கூடுதலாக வசூலிக்கப்படும். சிட்பியில் பெறப்பட்டுள்ள, 23 கோடி ரூபாய்க்கு ஆண்டுக்கு மூன்று சதவீத வட்டியுடன், 30 ஆண்டுகள் திரும்ப கட்ட வேண்டும். கட்டட பராமரிப்பு முழுவதும் கொசிமா மேற்கொள்ளும். முதல் ஓராண்டு மட்டும் கட்டட கான்ட்ராக்டர் பராமரிப்பை மேற்கொள்வார். இவ்வாறு, அவர் கூறினார்.

மாயமானது எங்கே?

வெள்ளலூரில் அச்சு வார்ப்பு குழுமம் ஒன்றை முதல்வர் திறந்து வைப்பார் எனவும், மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்தது. ஆனால் இதுபோல் ஒன்று, அப்பகுதியில் உள்ளதா என வருவாய் துறையினருக்கே தெரியவில்லை. அலுவலர்கள் பல இடங்களில் விசாரித்தும் பலனில்லை. அப்படியானால் இந்த அச்சு வார்ப்பு குழுமம் எங்கே உள்ளது என்பது, ஆண்டவனுக்கே வெளிச்சம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி