மேலும் செய்திகள்
ஊராட்சிகளில் மார்ச் 23ல் கிராம சபைகூட்டம்
17-Mar-2025
கிராம சபை கூட்டம் ஒத்திவைப்பு
24-Mar-2025
அன்னுார்; நூறு நாள் திட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்துக்கு சென்றதால், கிராம சபை கூட்டம் வெறிச்சோடி காணப்பட்டது.உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, மார்ச் 29ம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த ஊரக வளர்ச்சித் துறை அறிவுறுத்தி இருந்தது.அன்னுார் ஊராட்சி ஒன்றியத்தில், 21 ஊராட்சிகளிலும், 29ம் தேதி காலை 11:00 மணிக்கு கிராம சபை கூட்டம் நடைபெறும். பொதுமக்கள் பங்கேற்க வேண்டும் என அதிகாரிகள் அழைப்பு விடுத்திருந்தனர்.அன்னுார் ஒன்றியத்தில், 21 ஊராட்சிகளிலும் கூட்டம் துவங்கியது. ஒவ்வொரு ஊராட்சிக்கும், ஊராட்சி ஒன்றியம் சார்பில் பற்றாளர் நியமிக்கப்பட்டிருந்தனர்.எனினும் கஞ்சப்பள்ளி உள்பட பல ஊராட்சிகளில், கிராம சபை கூட்டத்திற்கு மிகக் குறைந்த நபர்களே வந்திருந்தனர்.ஊராட்சி தலைவர்களின் பதவிக்காலம் கடந்த ஜன., 5ம் தேதி முடிந்த பிறகு கூட்டம் நடத்துவதில் அதிகாரிகளுக்கு அதிக ஆர்வம் இல்லை. கிராம சபை கூட்டம் நடக்கும் அதே நேரத்தில் தி.மு.க., சார்பில் கரியாம்பாளையம், கணேசபுரம் மற்றும் பசூரில் 100 நாள் திட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படாததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்ததுஇந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றால் நிலுவை சம்பளம் பெற்று தரப்படும் என தி.மு.க.,வினர் தெரிவித்ததை அடுத்து கஞ்சப்பள்ளி, ஒட்டர்பாளையம் உள்பட பல ஊராட்சிகளில் இருந்து 100 நாள் திட்டத் தொழிலாளர்கள் தி.மு.க.,வின் ஆர்ப்பாட்டத்துக்கு சென்று விட்டனர். இதனால், பல ஊராட்சிகளில் கூட்டம் இல்லாமல் இருந்தது.'அரசு விரைவில் நிலுவை சம்பளத்தை வழங்க வேண்டும்' என, 100 நாள் திட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.'குடிநீர் பற்றாக்குறை உள்ளது. தட்டுப்பாடு இல்லாமல் வழங்க வேண்டும். முழுமையாக துாய்மைப்படுத்தி வழங்க வேண்டும்' என, கூட்டத்தில் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
17-Mar-2025
24-Mar-2025