உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இணைய வளர்ச்சி குறித்து பயிலரங்கு

இணைய வளர்ச்சி குறித்து பயிலரங்கு

கோவை; தொண்டாமுத்துார், ஸ்ரீ சாய் ரங்கநாதன் இன்ஜினியரிங் கல்லுாரியின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில், ஒரு நாள் பயிலரங்கு நடந்தது.கல்லுாரி வளாகத்தில், 'உலக அடித்தளங்கள் மற்றும் எதிர்காலத்தை உருவாக்குதல்' என்ற தலைப்பில் நடந்த பயிலரங்கிற்கு, கல்லுாரி தலைவர் முருகேசன், தாளாளர் தமிழரசி ஆகியோர் தலைமை வகித்தனர்.தலைமை விருந்தினரான கோவை லிட்ஸ் டெக் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கவுதம் லெவலே, வலை வடிவமைப்பு, இணைய வெளியீடு, வலை நிரலாக்கம் மற்றும் தரவுத்தள மேலாண்மை போன்ற துறைகளில் இணைய வளர்ச்சியின் முக்கியத்துவம் பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்கினார்.தொடர்ந்து கல்லுாரி மற்றும் லிட்ஸ் இந்தியா நிறுவனத்திற்கிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், கல்லுாரியின் தலைவர் முருகேசன் மற்றும் சி.இ.ஒ., கவுதம் லெவலே ஆகியோர் கையெழுத்திட்டனர்.இந்த ஒப்பந்தத்தின் மூலம், மாணவர்களிடையே தொழில்நுட்ப திறனை மேம்படுத்துதல், நடைமுறை பயிற்சிகளை வழங்குதல்,வேலைவாய்ப்புகளை ஏற்பாடு செய்தல் மற்றும் சுய வேலை வாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கல்லுாரி முதல்வர் ஞானமூர்த்தி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை