மேலும் செய்திகள்
காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
06-Oct-2025
நெகமம்: நெகமம் அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நெகமம், அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக காலநிலை தினத்தன்று, மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடந்தது. இதில், பள்ளி தலைமை ஆசிரியர் கனகராஜ் தலைமையேற்றார். இந்நிகழ்ச்சியில், மாணவர்களுக்கு உலக காலநிலை சார்ந்த கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது. தொடர்ந்து பசுமை உறுதிமொழி வாசிக்கப்பட்டது. தேசிய மாணவர் படை மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு சார்பில், பள்ளி வளாகம் தூய்மை செய்யும் பணிகள் நடந்தது. இறுதியாக பள்ளி வளாகத்தில் மஞ்சள் சரக்கொன்றை, புங்கன் மற்றும் வேம்பு உள்ளிட்ட மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை பள்ளி ஆசிரியர் பாலாஜிராஜா செய்தார்.
06-Oct-2025